திண்டுக்கல் லோக்சபா தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர், ஜோதிமுருகன். கல்வி நிறுவனங்களின் தலைவரான இவர், 'பசை' உள்ளவர். ஓட்டு இயந்திரத்தில் இவரது பெயர், 21வது இடத்தில் உள்ளது.இதை வாக்காளர்களுக்கு தெளிவாக விளக்கும் வகையில், சதுரவடிவில், கையடக்க டோக்கன் போன்ற அட்டையில், படமாக அச்சிட்டு உள்ளனர்.அதில், வரிசை எண், 21 மற்றும் சின்னமான பரிசு பெட்டகம் மட்டும் பெரிதாக தெரியும் வகையில் அச்சிட்டுள்ளனர். அதை, பிரசாரத்தின் போது வினியோகிக்கின்றனர்.இதை வாங்கியதும் வாக்காளர்களுக்கு, ஆர்.கே.நகர் நினைவு வந்து விடுகிறது. 20 ரூபாய் டோக்கன் போல, இங்கு, 21 ரூபாய் டோக்கன்வினியோகிக்கின்றனரோ என, கிசுகிசுக்கின்றனர். அவர்களின் சந்தேக பார்வையை புரிந்து கொள்ளும் கட்சியினர் சிரித்தபடி, 21ம் நம்பருக்கு விளக்கம் கொடுக்கின்றனர்.
வாசகர் கருத்து