'லுக் வாக்கர்' உடன் அ.தி.மு.க., ஓட்டு வேட்டை

மதுரை லோக்சபா தொகுதியில், 27 வேட்பாளர்கள் களத்தில் நின்றாலும், அ.தி.மு.க., வேட்பாளர், ராஜ்சத்யன், மார்க்சிஸ்ட் வேட்பாளர், வெங்கடேசன், அ.ம.மு.க., வேட்பாளர், டேவிட் அண்ணாத்துரை ஆகிய மூவர் மட்டுமே, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, அதிகம்ஓட்டுகள் உள்ள, மேலுார் சட்டசபை தொகுதியில், மூவரும் மாறி மாறி பிரசாரம் செய்து வருகின்றனர்.டேவிட் அண்ணாத்துரை, தன் கட்சியினருடன் ஓட்டு வேட்டையாடி வருகிறார். மதுரை கிழக்கு தொகுதியில் மட்டுமே, மார்க்சிஸ்ட் வேட்பாளருடன், எம்.எல்.ஏ., மூர்த்தி தலைமையில், தி.மு.க.,வினர் செல்கின்றனர். மற்ற தொகுதிகளில், பெயருக்கு தான், தி.மு.க.,வினர் பங்கேற்கின்றனர். ஆளுங்கட்சி கோதாவில், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ்சத்யன், கூட்டணி கட்சியினர் புடைசூழ ஓட்டு கேட்டு வருகிறார்.சவுராஷ்டிரா கிளப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், சவுராஷ்டிரா மொழியில், 'ரெட்டலே வோட் தவோ' எனப்பேசி ஓட்டு கேட்டார். ஆரப்பாளையம், புட்டுத்தோப்பு பகுதியில், நாயக்கர் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இதையறிந்து, அந்த பகுதியில் தெலுங்கில்,'மாட்லாடி' ஓட்டு கேட்டார்.மேலும், 'லுக் வாக்கர்'என்ற பெயரில், ஒளிரும், எல்.இ.டி., பதாகைகளை முதுகில் சுமந்து செல்லும் தொண்டர்களுடன் சென்று, மாசி, ஆவணி, வெளி வீதிகளில், ராஜ்சத்யன் பிரசாரத்தில் ஈடுபட்டது வித்தியாசமாக இருந்தது. அதில், ஒரு பதாகையில், ஓட்டுப்பதிவு இயந்திர மாதிரி தோற்றத்துடன், ராஜ் சத்யனுக்கு ஓட்டளிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும், தமிழ் புத்தாண்டையொட்டி, 'பாரம்பரியத்தில் வேரூன்றி, நவீன மதுரையை நோக்கி' என்ற தலைப்பில், தமுக்கம் மைதானத்திலுள்ள தமிழன்னை சிலைக்கு மாலையணிவித்து மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம் போன்ற கிராம கலைநிகழ்ச்சிகளுடன் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு ஓட்டு கேட்டனர்.பிரசாரம் ஓரிரு நாட்களில் முடியவுள்ள நிலையில், மதுரையில் இந்த மூன்று கட்சியினரின் பிரசாரம், உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாத மதுரை, பிரசார பீரங்கிகளால் திணறிக் கொண்டிருக்கிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)