பணிமனையில் தங்க தொண்டர்களுக்கு உத்தரவு

ஓட்டுப்பதிவுக்கு, இரு நாட்கள் மட்டுமே உள்ளதால், 24 மணி நேரமும், தேர்தல் பணிமனையில் தங்கும்படி, தொண்டர்களுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., உத்தரவிட்டுள்ளன.தமிழகத்தில், லோக்சபா தேர்தலுடன், 18 சட்ட சபை தொகுதிகளுக்கும், வரும் வியாழனன்று, ஓட்டுப்பதிவு நடக்கிறது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், ஒவ்வொரு தொகுதியிலும், தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், தலைமை தேர்தல் பணிமனையும்; வார்டுகளில், சிறு பணிமனைகளும் அமைக்கப்பட்டன.அங்கு அமர்ந்து, தேர்தல் வியூகம் தொடர்பாக, கட்சியினர் ஆலோசிப்பர்.தொடர்ந்து, பணிமனையில் இருந்து, வேட்பாளர் உள்ளிட்ட அனைவரும் வீடு திரும்பும் நிலையில், இரண்டு - மூன்று தொண்டர்கள் மட்டும், அங்கேயே, இரவில் படுத்து கொள்கின்றனர்.ஓட்டுப்பதிவுக்கு, இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. அதனால், முக்கிய கட்சிகள், வாக்காளர்களுக்கு, பணப்பட்டுவாடா செய்யும் பணியில் முனைப்பு காட்டி வருகின்றன. அவற்றை கண்காணித்து, தடுக்க வசதியாக, தொண்டர்கள், 25 பேர் பணிமனைகளில் தங்க வேண்டும் என, கட்சிகள் உத்தரவிட்டுள்ளன. அவர்களில், 10 பேர், இரு சக்கர வாகனத்தில், 'ரோந்து' வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.எதிரணியினர் பட்டுவாடா ஏதும் செய் கின்றனரா என, கண்காணித்து, தங்கள் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலர்களுக்கு தெரிவிக்கவும்; இரவில், எதிரணியினர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வசதியாக, தொண்டர்கள் பணிமனைகளில் தங்கவும், ரோந்து செல்லவும்கட்சிகள் உத்தரவிட்டுள்ளன.
- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)