தி.மு.க., அணியில் குழப்பம்



ஆண்டிப்பட்டி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:பிரதமராக, தனித்தகுதி, திறமை, வலிமை தேவை. அப்படிப்பட்ட திறமை வாய்ந்தவராக மோடி திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமராக, நாம் கூட்டணி அமைத்து ஓட்டு கேட்கிறோம். தி.மு.க., கூட்டணியில், அதன் தலைவர் ஸ்டாலின் மட்டுமே, ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார். அந்த கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்கள் யாரும் அதை ஏற்கவில்லை.தி.மு.க., கூட்டணி கட்சிகள் குழப்பத்தில் உள்ளன; அவர்களிடம் ஒற்றுமை இல்லை. சந்தர்ப்பவாத கூட்டணி. இங்கு காங்கிரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட்கள், கேரளாவில் எதிர்க்கின்றனர். நாட்டை காக்கக்கூடிய பிரதமர் மோடி, மீண்டும் நாட்டை ஆள ஓட்டு கேட்கிறோம். நாட்டில் நிலையான ஆட்சி ஏற்பட, மோடியை, மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)