பா.ஜ., அரசை அகற்ற வேண்டும்: கே.எஸ்.அழகிரி

சென்னை:'மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும்' என, தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி கூறிஉள்ளார்.

அவரது அறிக்கை:


ஐந்தாண்டுகால, பா.ஜ., ஆட்சியில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.நீதித்துறை, அமைச்சரவை, மத்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத் துறை, தேர்தல் ஆணையம், மத்திய கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகள், மோடியின் எதேச்சாதிகார நடவடிக்கைகளால், தன்னாட்சி உரிமையை இழந்துள்ளன.சிறுபான்மை மக்களுக்கு எதிராக, தாக்குதல் தொடர்கிறது.


பட்டியல் இன மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. வன்முறையால் பலர் கொல்லப்பட்டு உள்ளதால், பாதுகாப்பற்ற தன்மை அதிகரித்துள்ளது.மதக்கலவரங்களால் பலர், தங்கள் உயிரை இழந்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பில்லை. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.


எனவே, லோக்சபா தேர்தலில், மத்திய அரசை, ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழகத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர். தமிழக வாக்காளர்கள், மத்திய அரசால் பாதிக்கப்பட்டதுடன், மாநிலத்தில் நடந்து வரும், அராஜக ஊழல் ஆட்சியாலும், கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.


மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கிற்கு முடிவுகட்ட, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் சின்னங்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு, கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)