நான்கு தொகுதி இடைத்தேர்தல்தி.மு.க.,வில் குழு ஏற்பாடு

லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு, நான்கு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் பணியாற்ற, பல்வேறு குழுக்களை அமைக்க, தி.மு.க., முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும், 18ல் நடக்கவுள்ளது. இத்தேர்தலை சந்திக்க, காங்., - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன், தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. லோக்சபா தேர்தலில், 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க., ஒதுக்கி உள்ளது. அதேநேரத்தில், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், தி.மு.க., மட்டுமே போட்டியிடுகிறது. இத்தேர்தலில், அதிகளவில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., அரசை வீழ்த்த வேண்டும் என, தி.மு.க., தலைமை விரும்புகிறது.

இந்நிலையில், அரவக்குறிச்சி, சூலுார், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு, மே, 19ல், இடைத்தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை, தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ளது. நான்கு தொகுதி இடைத்தேர்தலின் போது, அ.தி.மு.க.,வினர், முழு பலத்தையும் பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இத்தேர்தலை சந்திக்க, தி.மு.க., வியூகங்களை வகுத்துள்ளது. அதன்படி, நான்கு தொகுதிகளிலும், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி வார்டுகள் வாரியாக, நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, பல்வேறு குழுக்கள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. லோக்சபா தேர்தல் முடிந்தவுடன், இதுகுறித்த அறிவிப்புகளை, தி.மு.க., தலைமை வெளியிடவுள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள, தி.மு.க., நிர்வாகிகள், இடைத்தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)