அசம்கான், மேனகாவுக்கு பிரசாரம் செய்ய தடை

புதுடில்லி: பா.ஜ., வேட்பாளரும் நடிகையுமான ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் அசம்கான் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கண்ணீர்சமாஜ்வாதியிலிருந்து விலகிய நடிகை ஜெயப்பிரதா, பா.ஜ., சார்பில் உ.பி.,யின் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை சமாஜ்வாதி கட்சியின் அசம்கான், கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரத்தின் போது மேடையிலேயே ஜெயபிரதா அழுதார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கண்டனம்இந்நிலையில், நேற்று (ஏப்.,14) ராம்பூரில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் பங்கேற்ற கூட்டத்தில் அசம்கான் பேசியதாவது: கடந்த 10 ஆண்டாக ஒருவர் ராம்பூர் மக்களின் ரத்தத்தை குடித்தார். அந்த நபரை ராம்பூருக்கு அறிமுகப்படுத்தியது நான் தான். அவரது விரலை பிடித்து நான் தான் அழைத்து வந்தேன். ராம்பூர் முழுவதும் அவரை நான் பிரபலமாக்கினேன். அவரை யாரும் நெருங்கவிடாமல் பார்த்து கொண்டேன். அவரை 10 ஆண்டுகளாக பார்லிமென்ட்டிற்கு அனுப்பி வைத்தீர்கள். அவரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள உங்களுக்கு 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி நிற உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாளில் தெரிந்து கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அசம்கான் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

கேள்விஇது தொடர்பாக ஜெயப்பிரதா கூறியதாவது: அசம்கானை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. அவர் வெற்றி பெற்றால், ஜனநாயகத்தில் என்ன நடக்கும்? பெண்களுக்கு சமூகத்தில் இடம் இருக்காது. நான் பயந்து ராம்பூரை விட்டு சென்று விடுவேன் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இங்கிருந்து நான் செல்ல மாட்டேன். நான் மரணமடைய வேண்டுமா? அப்போது தான் நீங்கள் திருப்தி அடைவீர்களா? என்றார்.

முடிவுஜெயப்பிரதா குறித்து அசம்கான் தெரிவித்த கருத்து தொடர்பாக ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் அவர் பிரசாரம் செய்ய தடை விதித்தது. இது போல் மத்திய அமைச்சர் மேனகாவுக்கும் தடை விதிக்கப்பட்டது. மேனகா பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பதன் அடிப்படையில் கிராமங்களுக்கு வளர்ச்சி பணிகள் வரும் என்றார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)