மோடி உடன் வந்த கறுப்பு பெட்டியில் இருந்தது என்ன?

டில்லி: கடந்த ஏப்.12ம் தேதி கர்நாடகா மாநிலம் சித்ரதுர்க்காவுக்கு மோடி சென்றபோது ஹெலிகாப்டரில் உடன் கொண்டு செல்லப்பட்ட கறுப்பு பெட்டியில் இருந்தது என்ன என்று தெரிய வந்துள்ளது.


இந்த பெட்டியில் ஏராளமாக பணம் கொண்டு செல்லப்படுகிறது என்று சந்தேகித்த இது குறித்து விசாரிக்குமாறு காங்., தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்தது. நாடு முழுவதும் இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டது. வாத, பிரதிவாதங்களும் நடந்தன. சித்ரதுர்க்கா பகுதி பா.ஜ., தலைவர் நவீன், ‛‛காங்., ஆட்சியில் இருந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, பிரதமருக்கு கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள் பற்றி அவர்கள் மறந்து விட்டனர். கறுப்பு பெட்டியில் டெலிபிராம்பரும் மற்றும் சில கருவிகளும் மட்டுமே இருந்தன'' என்று டுவீட் செய்திருந்தார்.

இருந்தது என்னஉண்மையில் இந்த பெட்டியில் சில எலக்ட்ரானிக் பொருட்கள், வயர்கள், பிரதமர் பேசும் மேடையில் வைப்பதற்கான சில கட்சி சின்னங்களும் இருந்ததாக தெரிகிறது.மோடி பேசும்போது, டெலிபிராம்டர் என்ற கருவியை பயன்படுத்துவார். அவர் பேசும் தொகுதிகள், மாநிலங்கள் பற்றிய விபரங்கள் அதில் ஏற்கனவே பதியப்பட்டு, பேசும்போது அதில் தெரியும். அதை வைத்து தான் அவர் பேசுவார். இதனால் அவர் பேப்பர் எதையும் பார்த்து பேச வேண்டிய அவசியம் இருக்காது.ஆனால் பார்ப்பவர்களுக்கு எதையும் படிக்காமல், மக்களைப் பார்த்து மோடி பேசுவது போல் தெரியும்.

நவீன் மேலும் கூறும்போது, ‛‛பிரதமர் மேடைக்கு செல்வதற்கு முன்பு 10 நிமிடங்களுக்குள் இந்த கருவிகள் கொண்டு செல்லப்பட வேண்டும். பிரதமரை அங்கிருப்பவர்கள் வரவேற்று முடிப்பதற்குள் இந்த வேலையை செய்தாக வேண்டும். காரில் கொண்டு செல்லப்பட்டால், பிரதமர் பேசுவதற்குள் இந்த பெட்டியை மேடைக்கு கொண்டு சென்று, கருவிகளை தயார் செய்ய முடியாது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.,) தான் இவற்றை கையாள்கிறது. பிரதமரின் கான்வாயில் வரும் அனைத்து வாகனங்கள் மத்திய ஐ.ஜ., மேற்பார்வையில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். பிரதமருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை கூறுவதற்கு முன், காங்., கட்சியினர் பொது அறிவை பயன்படுத்த வேண்டும் '' என்றார்.


Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-2019 19:08 Report Abuse
Sriram V Congies think everyone is like them
ஜெயந்தன் - Chennai,இந்தியா
16-ஏப்-2019 09:37 Report Abuse
ஜெயந்தன் ஆக மொத்தம் ஏதோ நடக்கிறது....தேர்தலில் வெற்றி பெற இந்த இரண்டு கட்சிகளுமே எதை வேண்டுமானாலும் செய்யும்...
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-2019 08:17 Report Abuse
Srinivasan Kannaiya சொன்னால் நம்பிக்கொள்ளவேண்டியது... அதில்தான் மிஸ்ஸஸ் என்பதை எம் ஆர் எஸ் இருக்கிறதா
16-ஏப்-2019 07:34 Report Abuse
ஆப்பு எல்லாம் தெரிஞ்சவர் மாதிரி பேசுபவருக்கு டெலிப்ராம்ப்டர் இல்லேண்ணா கதை கந்தல்தான்.
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-ஏப்-2019 06:10 Report Abuse
D.Ambujavalli பணப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு போகுமளவு manitha புத்தி உடையவர்களா பிரதமரின் காவல் அதிகாரிகள்? அவரது கடைநிலை ஊழியனே அதை செய்வானே பணமெல்லாம் வங்கி அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளேகூட பொறுப்பாக சேர்த்து பட்டுவாடாவும் செய்வார்களே
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
16-ஏப்-2019 06:03 Report Abuse
Ivan Ada namba Sudalai ku atha onnu vangi kodunga, aana avanuku pesura ellayhayum la eluthi ketpan thundu thunda.
meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஏப்-2019 04:39 Report Abuse
meenakshisundaram ஆஹா மோடியை எதிர்க்க கடைசி நிமிஷம் வரை போராடும் இந்த சமூக நீதி காப்பாளர்கள் (?) அவர் வந்த விமானத்தில் 'கருப்பு' பெட்டி என்கிறார்களே ?அவருக்கு இவர்கள் காட்டியது 'கறுப்பே 'அல்லவா?இப்போ அது வேண்டாம் என்கிறீர்களா?
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-ஏப்-2019 04:02 Report Abuse
J.V. Iyer அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் அவர்கள் செய்தவைகள் எல்லாம் நினைவில் வருவதால் வாரிசு அரசியல் குடும்ப கட்சிக்கு சந்தேகம். மற்றவர்கள் தண்ணீர் குடித்தாலும், குவாட்டர்தான்.
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-ஏப்-2019 00:55 Report Abuse
Mani . V சார் இது மக்களை முட்டாளாக்கி, திசை திருப்பும் வித்தை. இங்கு ஒரு கருப்பு பெட்டியை காட்டிவிட்டு பின்புறம் லாரி, லாரியாய் பணத்தை கொண்டு செல்வார்கள். கடைசியில் இந்த கருப்பு பெட்டியை திறந்து பார்த்தால் ஒன்றுக்குமே உதவாத பழைய துணிகளை போட்டு வைத்திருப்பார்கள். இது போன்ற ஏமாற்று வேலைகள் இவர்களுக்கு புதிதல்ல.
ram - chennai  ( Posted via: Dinamalar Windows App )
16-ஏப்-2019 00:35 Report Abuse
ram நல்லா யோசிச்சு எடுத்த முடிவா. நேரம் போனது தெரியல போல.
மேலும் 54 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)