இளங்கோவனுக்கு ஓ.பி.எஸ். எச்சரிக்கை

தேனி : அ.தி.மு.க., கூட்டணி மீது தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் தொடர்ந்து அவதுாறு பரப்புகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என்று துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், '' அவதூறு பரப்பும் இளங்கோவன் மீது முதலில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்படும். முறைப்படியான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்படும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போடுவோம்.

22தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., மாபெரும் வெற்றிபெறும். எட்டுவழிச்சாலை, நீட் தேர்வில் முதலமைச்சர் சொன்னது தான் அ.தி.மு.க., நிலைப்பாடு.எதிர்க்கட்சிகள் அவர்கள் ஆட்சிக்காலத்தில் எந்த சாதனையும் செய்யவில்லை. எனவே, தவறான பிரசாரம் செய்கிறார்கள்.

தி.மு.க., காங்., கூட்டணியை மக்கள் எந்தக்காலத்திலும் நம்பமாட்டார்கள். 2007 காவிரி இறுதித்தேர்வு வந்தபோது, காங்கிரஸ் ஆட்சி தான் மத்தியில் இருந்தது. மன்மோகன் சிங்கிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. எனவே, ஜெ., 2013 ல் உச்சநீதிமன்றத்தை நாடி, ஜெ., வாதாடி, போராடி இறுதித் தீர்ப்பை பெற்றார் என்பது வரலாறு.

காவிரி விவகாரத்தில் தி.மு.க., காங்., வரலாற்றுப் பிழை செய்தார்கள். 33 ஆண்டுகால பொதுவாழ்வில், நான் மகிழ்ச்சியாக இருந்த நாள், காவிரித் தீர்ப்பு பெற்றுத்தந்த நாள் தான் என்று ஜெ., தஞ்சையில் பேசினார். மேகாதாது விவகாரத்தில் ராகுல், கர்நாடகத்தில் பேசும்போது, காங்கிரஸ் ஆட்சி வந்தால் அங்கு அணை கட்டுவோம் என்கிறார். காங்கிரஸ் நிலைபாடு என்ன?, தமிழக மக்களை வஞ்சிக்கும் கருத்துக்கள் தான் காங்கிரஸ் கூட்டணியுடையது.

காங்கிரஸ் ஆளும்கட்சியாக வந்தால், 2 ஆணையத்தையும் கலைப்பேன் என்கிறார் ராகுல். ஆகவே, காங்கிரஸ் தி.மு.க., தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள். தகுதியும், திறமையும் இருந்தால், மக்கள் செல்வாக்கை பெற்றால், நீடித்து இருப்பார்கள். வாரி அரசியல் பிரச்னையில்லை. தேர்தல் விதிமுறைகளை காங்., திமுக தான் மீறுகிறார்கள். நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர் ஜெ., அதிமுக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்தும்.

சேதுசமுத்திரத் திட்டம் தொடங்கியபோதே, அந்தக் கடல் பகுதியில், மணல் நகரும் தன்மையுடையது. அதனால் கடலுக்குள் உள்ள மணலை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும்போது மீண்டும் மூடப்படும் என்று இயற்கை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை தந்திருக்கிறார்கள். எனவே, வீணாக 40 ஆயிரம் கோடியை கடலில் கொட்டியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


15-ஏப்-2019 16:45 Report Abuse
Nepolian S
BoochiMarunthu - Paradise papers,பனாமா
15-ஏப்-2019 16:21 Report Abuse
BoochiMarunthu மேகதாது அணை கட்ட ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு வக்கீல் கோர்ட்டில் முன்பு கூறினார் . அது எப்படி நடந்தது ? யார் வற்புறுத்தினார்கள் ?
காவல்காரன்: சுடலைஎப்போது சொன்னார்? விவரம் கொடுக்கலாம். ஸ்டாலின் அவர்களிடம் விசாரித்து வரவும்...
MIRROR - Kanchipuram,இந்தியா
15-ஏப்-2019 15:43 Report Abuse
MIRROR நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என மத்திய அரசு சொல்லிவிட்டது எட்டு வழிச் சாலை அப்பீல் செய்யப்பட்டு சாலை போடப்படும் என மத்திய அமைச்சர் கூறுகிறார்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)