அவசரமாக அருண்ஜெட்லி இந்தியா திரும்பியது ஏன்

புதுடில்லி: தலைக்கு மேல் தேர்தல் பணிகள் இருப்பதால், அமெரிக்காவில் இருக்கும் அருண் ஜெட்லியை உடனே இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைத்துள்ளார். இதையடுத்து அவர் இந்தியா திரும்பினார்.


உலக வங்கியின் சர்வதேச நிதி அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ளவும், உடல்நிலைக்கு சிகிச்சை பெறுவதற்காகவும் அமெரிக்கா சென்றிருந்தார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. தேர்தல் சூடு உச்சக்கட்டத்தில் இருப்பதாலும் வேறு கட்சி பணிகள் பற்றி ஆலோசனை நடத்த வேண்டி உள்ளதாலும் அவரை உடனே இந்தியாவுக்கு திரும்புமாறு மோடி கேட்டுக்கொண்டார். ஜெட்லியும் உடனே இந்தியா திரும்பினார்.பா.ஜ.,வுக்கும் ஆர்.எஸ்.எஸ்.,-க்கு இடையே ஒருங்கிணைப்பு பணிகளை செய்து வந்தவர் ஜெட்லி. மீண்டும் அதுபோன்ற வேலைகள் இருப்பதால் அருணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


மேலும், கட்சியின் கொள்கைகள், பிரதமரின் எண்ண ஓட்டம் போன்றவை பற்றி டிவி விவாதங்களில் விவாதிக்கவும் டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் பயிற்சி நடந்து வருகிறது. இவர்களுக்கு பல விஷயங்களை ஜெட்லி கற்றுத் தர வேண்டி உள்ளது.தேர்தல் ஆணையம் தொடர்பான விவகாரங்களை கையாளும் பணியும் ஜெட்லிக்கு தரப்பட்டுள்ளது. மோடிக்கு நெருக்கமானவர் ஜெட்லி. ஏதாவது சட்ட பிரச்னை என்றால் அவருக்கு உடனுக்குடன் ஆலோசனை தருவது ஜெட்லி தான். டிவி, நாளிதழ்களில் வரும் பா.ஜ., விளம்பரங்களையும் ஜெட்லி தான் கண்காணிக்கிறார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)