தமிழகத்தில் ஓட்டுப்பதிவு எப்படி இருக்கும்?

சென்னை : தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் 3 நாட்களே உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை மிகப் பெரிய தலைவர்களாக திகழ்ந்த திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் மறைவிற்கு பிறகு நடக்க இருக்கும் முதல் தேர்தல் இது.
இந்நிலையில் மத்தியில் அடுத்து எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை தமிழகம் தீர்மானிக்க உள்ளது. தமிழக அரசியல் நிலை, லோக்சபா தேர்தல் நிலவரங்களை வைத்து தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்படி இருக்கும் என்பது குறித்து என்டிடிவி.,யின் குழு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.
அதன் விபரம் :
இந்தியாவில் 1952 முதல் 2014 வரை அதிக ஓட்டுப்பதிவு நடந்து, தனிஒரு கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.தமிழகம் - 94 %பீகார் - 88%ம.பி., - 88%கர்நாடகா - 81 %மகாராஷ்டிரா - 81%கட்சிக்கு அதிக ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றியை பெற்று தந்த டாப் 5 மாநிலங்களிலும் தமிழகம் இடம்பிடித்துள்ளது.
மகாராஷ்டிரா - 23%அரியானா - 22 %கர்நாடகா - 20%தமிழகம் - 20%அசாம் - 19%
தமிழகத்தில் 1980கள் முதல் திராவிட கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தேசிய கட்சிகளான பா.ஜ., மற்றும் காங்., க்கு பதிவான ஓட்டுக்கள் சரிவடைந்து வந்துள்ளன. 1980 மற்றும் 90 களில் 75 சதவீதம் ஓட்டுக்கள் திமுக மற்றும் அதிமுக.,விற்கே பதிவாகி உள்ளது. காங்.,ன் ஓட்டு சதவீதம் 20 லிருந்து 4 ஆக சரிந்துள்ளது. பா.ஜ., ஓட்டு சதவீதம் 2 லிருந்து 3 ஆக அதிகரித்துள்ளது.

ஜெயலலிதா இருந்த வரை 10 சதவீதம் பெண்கள் ஓட்டிலேயே முன்னிலையில் இருந்துள்ளது அதிமுக. இதே போன்று 2014 தேர்தலில் திமுக., 2 சதவீதம் ஆண்கள் ஓட்டில் முன்னிலையில் இருந்தது. தென்னிந்தியாவை பொறுத்தவரை பெண்கள் ஓட்டு அதிகம் பதிவாகும் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
இந்த முறை அதிமுக, பா.ஜ.,வுடனும், திமுக, காங்., உடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. இவர்கள் தவிர கமலின் மக்கள் நீதி மையம் கட்சி, தினகரனின் அமமுக., ஆகியவை தனித்து களம் காண்கின்றன. ரஜினி, கமல் வருகையால் அதிமுக - திமுக.,வுக்கு மாற்றாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடம் நிரப்பப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களில் கமல் மட்டுமே தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக - திமுக தவிர கமல், தினகரனின் கட்சிகளும் தனியாக போட்டியிடுவதால் முந்தைய தேர்தல்களை விட இந்த தேர்தலிலும் அதிக எண்ணிக்கையில் ஓட்டுப்பதிவு நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)