காங்.,கிற்கு கை கொடுக்குமா ராகுலின் போட்டி

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் ராகுல், வயநாட்டில் போட்டியிடுவதால் காங்கிரசுக்கு கேரளாவில் பலன் ஏற்படப்போவதில்லை என்று ஏசியா நெட் தொலைக்காட்சி ஆய்வில் தெரியவந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ராகுல், வயநாட்டில் போட்டியிட்டால், அது கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுக்கும். வயநாடு தொகுதி கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு எல்லையில் இருப்பதால் இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு பலன் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. எனவே, மூத்த காங்கிரஸ் தலைவர்களின் வற்புறுத்தலின்படி ராகுல், அமேதியை அடுத்து வயநாட்டிலும் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஏசியா நெட் தொலைக்காட்சி, இதுகுறித்த கருத்தாய்வை கேரள மக்களிடம் நடத்தியது. அதில், பெரும்பான்மையான மக்கள் 'ராகுல் அலை' என்று கேரளாவில் ஏதுமில்லை.

சொல்லப்போனால், அவர் 2 வது தொகுதியாக வயநாட்டை தேர்வு செய்தது தேவையற்றது என்றும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
இந்த தேர்தலில், கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சமாக, வேலையின்மை, ஊழல் மற்றும் வளர்ச்சி குறித்த அம்சங்களே இருக்கும் என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

திருவனந்தபுரம் தொகுதியில் இந்த முறை பா.ஜ., வின் கும்மனம் ராஜசேகரன் வெற்றிபெற்று, கேரளாவில் பா.ஜ., எண்ணிக்கை தொடங்கும். சிட்டிங் எம்.பி.,யான காங்கிரசின் சசீதரூரை விடவும் 6 சதவீதம் ஆதரவில் முன்னணியில் வகிக்கிறார். ஆளும் கூட்டணி வேட்பாளர் திவாகரன் அங்கு 3வது இடத்தையே பிடிப்பார் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

'ராகுல் அலை' ஏதுமில்லை என்ற ஆய்வு முடிவுகள், காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)