மக்களை திசை திருப்பலாம் என மனப்பால் குடிக்கிறார்: ரங்கசாமி மீது நமச்சிவாயம் கடும் தாக்கு


புதுச்சேரி:'இந்த அரசு இன்னும் 2 ஆண்டு ஆட்சிக்காலத்தை செம்மையாக பூர்த்தி செய்யும்' என காங்., மாநில தலைவர் நமச்சிவாயம் பேசினார்.
புதுச்சேரி லோக்சபா காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பாகூர் தொகுதி, காட்டுக்குப்பத்தில் அவர் பேசியதாவது;புதுச்சேரி மாநிலத்திற்கு முழு மாநில அந்தஸ்த்து கொடுப்பேன் என ராகுல் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறார். மோடி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் புதுச்சேரி மாநிலத்தை பற்றி ஒரு வரிகூட இல்லை.அந்த கட்சியுடன் தான் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கூட்டணி வைத்துள்ளார். இதனை சிந்தித்து பார்த்து மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் நம்முடைய சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டும். நம்முடைய குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஓட்டு என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். விவசாயத்திற்கு தனி பட்ஜட் கொடுப்பேன் என்று ராகுல் கூறியிருக்கிறார். ஒரே வரி, ஒரே நாடு என்று கூறிய மோடி ஜி.எஸ்.டி., வரியை கொண்டு வந்ததால், விலை வாசி ஏறிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் படுத்துவிட்டது. வியாபாரிகள் கஷ்டப்படுகின்றனர்.இந்நிலை மாற வேண்டும் என்றால், ராகுல் பிரதமராக வரவேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் இந்த அரசு பொறுப்பேற்றதும், முதல்வர் நாராயணசாமி 22 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, நமது அரசுக்கு அனைத்து வகையிலும் தொல்லை கொடுத்தாலும் அதையெல்லாம் மீறி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நீங்கள் கைச்சின்னத்திற்கு ஓட்டளித்தால் நமது வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்று அமைச்சராகி பாராளுமன்றத்தில் நமக்காக குரல் கொடுப்பார். எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும் என்ற புதிய கதையை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை திசை திருப்பிவிடலாம் என மனப்பால் குடிக்கிறார். இந்த அரசு இன்னும் 2 ஆண்டு ஆட்சிக்காலத்தை செம்மையாக பூர்த்தி செய்யும்.இவ்வாறு காங்., தலைவர் பேசினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)