அ.தி.மு.க., பிரமுகரிடம் ரூ.1 கோடி பறிமுதல்

வேலுார் : சோளிங்கர் அருகே, அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில், 1 கோடி ரூபாயை, வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வேலுார் மாவட்டம், சோளிங்கர் அடுத்த மின்னல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன், 55; அ.தி.மு.க., பிரமுகரான இவர், வி.ஆர்.வி., என்ற லுங்கி நிறுவனம் நடத்தி வருகிறார்.தீனதயாளனிடம் கணக்கில் வராத பணம், பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.
இதன்படி, சென்னை, வேலுார், காஞ்சிபுரத்தில் இருந்து வந்த, வருமான வரித்துறை அதிகாரிகள், 20 பேர் அடங்கிய குழுவினர், நேற்று முன்தினம், இரவு, 9:00 மணி முதல், நேற்று அதிகாலை, 5:00 மணி வரை, அவரது வீடு, லுங்கி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இதில், 1 கோடியே, 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இவரது உறவினரான மாதவன், மின்னல் ஊராட்சி செயலராக உள்ளார். அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தியதில், கணக்கில் வராத, 3 லட்சம் ரூபாய் சிக்கியது.
ரூ.12 லட்சம் பறிமுதல்சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கட்டிக்குளம் கிராமத்தில், அ.தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு பணம் வழங்க வந்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்தனர்.அதில் இருந்த, ஏரியூரைச் சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் நீதிதேவனிடம், 12 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, மானாமதுரை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.ஈரோடு ஓட்டலில் சோதனைஈரோடு, பெருந்துறை ரோடு, சம்பத் நகரில், 'கிளப் மேலாஞ்' ஓட்டல் உள்ளது. ஓட்டலில், நான்கு, 'ஏசி'அறைகள், அ.தி.மு.க.,வினரால் நிரந்தரமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளன.
தினமும் மதியம் துவங்கி, விடிய விடிய, அ.தி.மு.க., பிரமுகர்கள் பணம் வைத்து, சீட்டாடுவது வாடிக்கை. இங்குள்ள அறைகளில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, அதிகளவில் இருப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியானது.இந்நிலையில், வருமான வரித்துறையை சேர்ந்த, 10 அதிகாரிகள், நேற்று மாலை திடீரென காரில் வந்து இறங்கி, ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். நான்கு பேரை பிடித்து, வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஓட்டலை விட்டு வெளியேற, அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மாலை, 4:15 மணி முதல் இரவு வரை தொடர்ந்து சோதனை நடந்தது. ஓட்டலில், நேற்று மாலை யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.ஈரோடு லோக்சபா தொகுதியில் கணேசமூர்த்தி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., ரகசிய இடத்தை நன்கு தெரிந்த நபர்கள் யாரேனும், வருமான வரித்துறைக்கு இவ்விஷயத்தை, 'போட்டு' கொடுத்து இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)