'பொதுத்துறை நிறுவனங்களில் மாநில இளைஞர்களுக்கு வேலை'

சென்னை : 'பொதுத்துறை நிறுவனங்களில், தொழிலாளர் நிலையிலான பணியிடங்கள், அந்த மாநிலத்தினரை வைத்து நிரப்பப்படும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தமிழக இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு உரிமையை வென்றெடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இதை கருத்தில் வைத்து, மாநிலத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில், அதிகாரிகள் பணியிடங்களை தவிர்த்து, தொழிலாளர் பணியிடங்கள் அனைத்தும், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வைத்தே நிரப்பப்படும்.
மாநிலங்களில் உள்ள, மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும், அலுவலகங்களில் இடமாற்றம் செய்யப்படாத, இடைநிலை பணியிடங்களில், 50 சதவீதமும், கடைநிலை பணியிடங்கள் முழுமையாகவும், மாநில ஒதுக்கீடாக அறிவிக்கப்படும். இப்பணியிடங்களில், சம்பந்தப்பட்ட மாநிலத்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இது, பா.ம.க., தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று.லோக்சபா தேர்தலுக்குப் பின், மத்தியில் தொடரவுள்ள ஆட்சியில், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை, பா.ம.க., உறுதி செய்யும். இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)