பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக, அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பு

திருத்தணி:பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக, ஊராட்சியில், அ.தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று, ஓட்டு சேகரித்தனர்.


திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் ஊராட்சியில், ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஒன்றிய கழக துணை செயலர் சீனிவாசன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., கட்சி தொண்டர்கள் வீடு வீடாக சென்று, ஓட்டு சேகரித்தனர்.மேலும், பா.ம.க., வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை, ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால், ஊராட்சியில் அடிப்படை வசதிகள் மற்றும் திருத்தணிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். குடிநீர் பிரச்னை நிரந்தரமாக தீர்க்கப்படும் என, பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்து ஓட்டு சேகரித்தனர்.


அதே போல், திருத்தணி ஒன்றியத்தில், தி.மு.க., வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக, ஒன்றிய தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், வீடு வீடாக சென்று, ஓட்டு சேகரித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)