ராகுலுக்கு தோல்வி பயம்: ஸ்மிருதி இரானி

சென்னை:''அமேதி தொகுதியில், தோல்வி ஏற்படும் என்ற பயத்தால், ராகுல், கேரள மாநிலம், வயநாட்டில் போட்டியிடுகிறார்,'' என, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி பேசினார்.
மத்திய சென்னை, பா.ம.க., வேட்பாளர், சாம் பாலை ஆதரித்து, பாரிமுனை பகுதியில், நேற்று அவர் பிரசாரம் செய்தார்.


அப்போது, அவர் பேசியதாவது:நான், அமேதி தொகுதியில் இருந்து, சென்னைக்கு வந்துள்ளேன்.
அமேதி, ரேபரேலி தொகுதியில், 50 ஆண்டுகளாக, இந்திரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான், எம்.பி.,க்களாக இருந்து வருகின்றனர். ஆனாலும், அந்த தொகுதிகளில், போதிய வசதிகளை அவர்கள் செய்யவில்லை. பிரதமராக மோடி வந்த பின், அமேதி தொகுதியில், இரண்டு லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.


கடந்த, 50 ஆண்டுகளாக நடக்காத விஷயம், ஐந்து ஆண்டுகளில் நடப்பதை கண்டு, அப்பகுதி மக்கள், பா.ஜ., மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அமேதி தொகுதியில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தால், ராகுல், கேரள மாநிலம், வயநாட்டில் போட்டியிடுகிறார்.பா.ஜ., அனைத்து மதத்தினரையும் சமமாக பார்க்கும் கட்சி. புல்வாமா தாக்குதலின் போது, பிரதமர் மோடி உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.


அவரால் தான், நாட்டிற்கு சிறந்த பாதுகாப்பை தர முடியும். நாட்டில், இன்னும் பல திட்டங்களை, மோடி செயல்படுத்துவார். எங்களுடைய கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். மே, 23ல், மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.இவ்வாறு, ஸ்மிருதி இரானி பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)