தேர்தல் விதிமுறை மீறி திருமாவளவன், 'போஸ்டர்'

தேர்தல் விதிமுறையை மீறி, தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒட்டிய, திருமாவளவனின் புகைப்படத்துடனான போஸ்டர் குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அம்பேத்கரின், 128ம் பிறந்த நாளை ஒட்டி, தாம்பரம் ரயில் நிலையத்தில், 'ரயில்வே தொழிலாளர் முன்னணி, ரயில் ஓட்டுனர்கள் தெற்கு ரயில்வே' என்ற பெயரில், போஸ்டர்கள் அடிக்கப்பட்டு உள்ளன.அதில், அம்பேத்கர், புத்தர் படங்களுடன், வி.சி., தலைவர், திருமாவளவனின் படமும் இடம் பெற்றுள்ளது.


இந்த போஸ்டர்கள், நிலைய அதிகாரி அறை, பிளாட்பாரங்கள் என, எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில், கட்சி தலைவர்களின் படங்கள், அரசு அலுவலகங்களின் வளாகங்களில் இருக்கக்கூடாது என, கட்டுப்பாடு உள்ள நிலையில், நிலையம் முழுவதும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, தேர்தல் விதிமீறலாகும்.இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க, தேர்தல் பார்வை யாளருக்கும், ரயில்வே உயரதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)