அ.தி.மு.க., பிரமுகர் மீது அ.ம.மு.க.,வினர் தாக்குதல்

திருச்சி : திருச்சியில், அ.தி.மு.க., வட்டச் செயலர் மீது, அ.ம.மு.க.,வினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.திருச்சி, கே.சாத்தனுார் பகுதியில் உள்ள, தென்றல் நகர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தலைவர் கந்தசாமி, 48. அப்பகுதி, அ.தி.மு.க., வட்டச் செயலராகவும் உள்ளார்.இவர் நேற்று, சாத்தனுார் பகுதியில், தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, அ.ம.மு.க.,வைச் சேர்ந்த, ஏழு பேர், கந்தசாமியை கண்மூடித்தனமாக, இரும்பு ராடு, கட்டையால் தாக்கினர். மேலும் தலை, கையில் அரிவாளால் வெட்டி, அங்கிருந்து தப்பியோடினர்.
படுகாயமடைந்த கந்தசாமி, திருச்சி, கே.எம்.சி., மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்தது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது. ஏழு பேரையும், போலீசார் தேடி வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)