'இப்போ யார் வைச்சிருக்கா...' கேட்கிறார் நடிகர் செந்தில்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.ம.மு.க., வேட்பாளர் மாரியப்பன் கென்னடியை ஆதரித்து, நடிகர் செந்தில் பேசியதாவது:'நான் மறைந்த பிறகும், அ.தி.மு.க., 100 ஆண்டுகள் இருக்கும்' என்றார் ஜெயலலிதா. தற்போது, அ.தி.மு.க., யாரிடம் இருக்கு என்றே தெரியவில்லை. நான் நடித்த, கரகாட்டக்காரன் படத்தில், 'காரை வைச்சிருந்த சொப்பன சுந்தரியை, இப்ப யார் வைச்சிருக்காக...' என்று கேட்பது போல, அ.தி.மு.க., இப்போது பன்னீர் செல்வத்திடமா அல்லது பழனிசாமியிடமா அல்லது மோடியிடமா என, தெரியவில்லை.அ.தி.மு.க., - தி.மு.க., வினர், ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்; அது உங்கள் பணம் தான். நீங்கள் கட்டிய வரிப்பணம் தான், உங்களுக்கு திரும்ப வருகிறது. ஜெ., யாரிடம் கூட்டணி வைக்காமல் இருந்தாரோ, அவர்களிடம் இப்போது, அ.தி.மு.க., கூட்டணி வைத்து துரோகம் செய்துஉள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)