'இரவில் பணம் தருவரோ...': தூக்கத்தை தொலைத்த மக்கள்

தேனி லோக்சபா தொகுதியில், தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. அ.தி.மு.க., சார்பில், துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத்குமார், காங்., சார்பில் இளங்கோவன், அ.ம.மு.க., சார்பில், தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகின்றனர். வி.ஐ.பி., தொகுதியாக இருப்பதால், பணப்புழக்கத்திற்கும் பஞ்சமில்லை. இது மட்டுமில்லாமல், வி.ஐ.பி., தொகுதியாக இருந்த ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தலும் நடப்பதால், சொல்ல வேண்டியதே இல்லை. இதனால், இத்தொகுதியில் பணப்புழக்கம் அதிகளவில் உள்ளது.இது ஒரு புறம் இருந்தாலும், தேர்தல் பறக்கும் படையினர், துாங்கும் நேரத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விட வேண்டும் என, சம்பந்தப்பட்ட வார்டு பொறுப்பாளர்களுக்கு, இரு கட்சிகளின் தலைமைகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. இத்தகவல், வாக்காளர்களுக்கு கசிந்ததால், 'ஓட்டுக்கு பணம் கொடுக்க கட்சியினர் இரவு நேரத்தில், எப்போது கதவைத் தட்டுவரோ...' என, துாக்கத்தை தொலைத்து எதிர்பார்ப்பில் உள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)