பொய் பேசுகிறார்: மோடியை சாடும் பினராயி

கொல்லம்: சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் பேசுகிறார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசினாலே, பினராயி தலைமையிலான அரசு, பக்தர்களை கைது செய்வதாக, பிரதமர் மோடி, பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தார். இதுகுறித்து கொல்லத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பினராயி, சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பேசியது பச்சை பொய். தவறான தகவல்களை தந்துள்ள பிரதமர், மக்களை தவறாக வழிநடத்துகிறார். தவறான செயல்கள் செய்திருப்பவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

லோக்சபா தேர்தல் பிசாரத்தின் போது எந்த ஒரு அரசியல் கட்சியும் சபரிமலை விவகாரத்தை பேசக்கூடாது என தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)