தமிழக தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு: கட்காரி

சேலம்: மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்ததும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைப்போம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

சேலத்தில் அதிமுக பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., மத்திய அமைச்சர் கட்காரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோதாவரி காவிரி இணைப்பு
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் கட்காரி பேசியதாவது:
கோதாவரியில் 1000டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை காவிரியில் கலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ. 60 ஆயிரம் கோடியில் கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம். மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தவுடன் இந்த திட்டம் உடனடியாக துவக்கப்படும். கால்வாய்திட்டத்திற்கு பதில் பைப்லைன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் திருவள்ளூர் மாவட்டம் முதல் ராமநாதபுரம் வரை பயன்பெறும்.
தென் மாநிலங்களில் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதே முதல் இலக்கு.காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. மேலாண்மை ஆணையம் மூலம் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

எதிர்காலத்தை மாற்றும்
nsmimg684085nsmimg

மத்திய சாலை மற்றும் தரை வழி போக்குவரத்து அமைச்சகம் மூலம் சேலம், கோவையில் 8 மேம்பாலங்கள் கட்ட உதவி அளித்துள்ளோம். பல திட்டங்களுக்கு உதவி செய்துள்ளோம். தமிழகம் வேகமாக வளரும் மாநிலம். வளர்ச்சிக்காக முதல்வர் பணியாற்றி வருகிறார். பிரதமர் மோடி , அனைத்து மத்திய அமைச்சர்களும் தமிழக அரசிற்கு உதவி செய்கின்றனர். தமிழகத்தின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு பொருத்தமான கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியின் வெற்றி பெற்றால், தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். இது உங்களின் எதிர்காலத்தை மாற்றும். தமிழகத்தின் வளர்ச்சியை உறுதிபடுத்தும்.

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் சேலத்திற்கு முக்கியமான திட்டம். இந்த திட்டத்திற்கு கோர்ட் தடை விதித்துள்ளது. விவசாயிகளுக்கு உரிய தொகையை விட அதிக தொகை அளித்துள்ளோம். விவசாயிகள் அனைவருடனும் பேசி உரிய காலத்திற்குள் அமைக்கப்படும். பாஜ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மத்தியில் தேஜ கூட்டணி ஆட்சி அமைந்ததும், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைகளை தீர்த்து வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)