அர்ச்சனை 'சாமி'யை நம்பாதீங்க; விருதுநகரில் கமல் ஆவேசம்

விருதுநகர்:-''எதோ ஒரு சாமிக்கு அர்ச்சனை பண்ண சொன்னார்களே, அந்த சாமியை எல்லாம் நம்பி விடாதீர்கள்,''என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசினார்.


விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: எங்களது வேட்பாளர்கள் மாற்றத்தை உருவாக்கியே தீருவார்கள். இல்லையென்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய் கொண்டே இருப்பார்கள். விருதுநகரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் அவலம், ரயில்வே மேம்பாலங்கள் இல்லாமல் போக்குவரத்து நெருக்கடி என பிரச்னைகள் ஏராளம்.


ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டு கேட்டு வருகிறார்கள். இது பிரதமர் யார் என தேர்ந்தெடுக்கும் தேர்தல் எனக் கூறி மனதை மயக்குவார்கள். பிரதமர் யார் வேண்டுமானாலும் வரட்டும்.விருதுநகர் தொகுதிக்காக குரல் எழுப்ப ஒரு ஆள் வேண்டாமா. நான் ரொம்ப கோபத்தில் அரசியலுக்கு வந்தவன், வியாபாரத்திற்காக வரவில்லை. மக்களின் கோபம் தணியும்போது தான் என் கோபமும் தணியும்.


இங்கே உள்ள இரு கழகங்களும் அகற்றப்பட வேண்டும். அவ்விரு கட்சிகளும் சதுரஅடிக்கு இத்தனை பேருன்னு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கிறார்கள். பெண்ணை நம்பி தமிழகத்தை மட்டுமில்லை இந்தியாவையே ஆள கொடுத்திருந்தோம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என அவர்களையும் துாக்கிப் போட்டவர்கள் நாம். இப்போது இருப்பவர்கள் அவர்களை விட மோசமானவர்கள். அவர்கள் அகற்றப்பட சரியான நேரம் இது. எதோ ஒரு சாமிக்கு அர்ச்சனை பண்ண சொன்னார்களே அந்த சாமியை எல்லாம் நம்பி விடாதீர்கள்,என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)