அனல் பறக்கும் களத்தில் சுயேச்சைகளால், 'தமாஷ்!'

லோக்சபா தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை மிஞ்சும் வகையில், சுயேச்சை வேட்பாளர்கள், அதிக எண்ணிக்கையில் போட்டியிடுவது வழக்கம். இதில், சிலர் மட்டுமே உண்மையான குறிக்கோளுடன் போட்டியிடுகின்றனர். பெரும்பாலானவர்கள், பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டியிடுகின்றனர்.நடைபெற உள்ள, லோக்சபா தேர்தலில், விழுப்புரம் தொகுதியில், சுயேச்சைகளுக்கு பஞ்ச மில்லை. இங்கு போட்டியிடும், சுயேச்சை வேட்பாளரான அரசன் என்பவருக்கு, பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தலை மீது பலாப்பழத்தை சுமந்தவாறு சென்று, ஓட்டு சேகரித்து, கலகலப்பை ஏற்படுத்தி வருகிறார்.சமீபத்தில், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை, செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள்ளும், தலையில் பலாப்பழத்துடன் வந்த அரசனால், பரபரப்பு ஏற்பட்டது.தேர்தலில் போட்டியிடுவது குறித்து அரசனிடம் கேட்டபோது, 'தேர்தலில் போட்டியிடுவதால் தான் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை அடிக்கடி சந்திக்க முடிகிறது. இல்லாவிட்டால், அவர்களை எல்லாம் பார்க்க முடியுமா...' என, 'பளிச்' கேள்வி எழுப்பினார்.மேலும், மக்களுக்கு நல்லது செய்வதற்காக போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)