மீண்டும் ஓட்டுச்சீட்டு முறை சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

புதுடில்லி : ஆந்திராவில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ''தேர்தலில், மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், லோக்சபா தேர்தலுடன், சட்டசபைக்கும், 11ல் தேர்தல் நடந்தது.இந்நிலையில், டில்லியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை, சந்திரபாபு நாயுடு, நேற்று சந்தித்து, புகார் அளித்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:ஆந்திர மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப, தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. மாநிலத்தில் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், பல ஓட்டுச்சாவடிகளில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில், பழுது ஏற்பட்டது. மின்னணு ஓட்டு இயந்திரம் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டதுநாட்டில், தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற, ஓட்டுச் சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில், அவர் கூறியிருந்தார். பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''தேர்தல் ஆணையம், தன்னாட்சி பெற்ற அமைப்பு தான். ஆனால், பிரதமரின் உத்தரவின்படி தான் செயல்படுகிறது, ஆந்தி ராவில், ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சிக்கு சாதக மாகவே, தேர்தல் ஆணையம் செயல்பட்டது,'' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)