மோடி ஜெயிக்க வைப்பார்: ஹேமமாலினி

மதுரா : எனது சிறப்பான செயல்பாடுகளும், பிரதமர் மோடியும் நான் வெற்றி பெற உதவுவார்கள் என மதுரா தொகுதி பா.ஜ., வேட்பாளரான ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.


ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: நான் நல்ல பல பணிகளை தொகுதிக்காக செய்துள்ளேன். அதனால் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ., அரசும் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மக்கள் எனக்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள். மீண்டும் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி புதிய அரசு அமையும்.



ஒட்டுமொத்த சிஸ்டமும் மாறி உள்ளது. மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து மக்கள் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். பல்வேறு ஜாதிகளை சேர்ந்தவர்களும் பிரதமர் மோடி தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள் என்றார்.


மேனகாவின் சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹேமமாலினி, முத்தலாக் விவகாரத்தில் பெரும்பாலான சிறுபான்மையின பெண்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆதரவு அளிக்காவிட்டாலும் நாம் அனைவருக்கு உதவ வேண்டும். எனக்கு யார் ஓட்டளிக்கிறார்கள் அல்லது ஓட்டளிக்கவில்லை என்பது பிரச்னை இல்லை. இது போன்ற எண்ணம் எனக்கு வராது. ஜாதி அரசியல் இனி எடுபடாது என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)