வீட்டுக்கு வந்துருப்பா; மகனுக்கு தாய் ரப்ரி அழைப்பு

பாட்னா: சமீப காலமாக வீட்டை விட்டு பிரிந்திருக்கும் மகன் தேஜ் பிரதாப்யாதவ் சீக்கிரம் வீட்டிற்கு திரும்ப வேண்டும் என அவரது தாயாரும், முன்னாள் பீகார் முதல்வருமான ரப்ரி தேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் சிறையில் அடைக்கப்பட்டது முதல் கட்சியில் குழப்பம் ஏற்பட்டதோ இல்லையோ குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேஜ் பிரதாப்யாதவ் , தேஜஸ்வி என இரண்டு மகன்கள் உள்ளனர். லோக்சபா தேர்தலில் அவரவர் ஆதரவாளர்களுக்கு சீட் ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டது.

அரசியல் பின்னணியா ?

லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப்யாதவ் , கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரின் மகளான ஐஸ்வர்யாராய் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்தனர். தற்போது விவாகரத்து வரை போய் உள்ளது.

இந்நிலையில் " மகனே தனியாக இருந்தது போதும், சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடு" என ரப்ரிதேவி கூறியுள்ளார். தனது மகனை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர் என்றும் இதில் அரசியல் கலப்பு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.பா.ஜ., மற்றும் ஐக்கியஜனதாதள கட்சியினர் உள்ளதாவுகம் அவர் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)