வாகனங்களை நிறுத்தி ஓட்டு வேட்டை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், தே.மு.தி.க.,வினர், சாலையில் சென்ற வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, பயணியரிடம், இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டனர்.காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், எம்.பி., மரகதம், மீண்டும் போட்டியிடுகிறார்.


இவரை ஆதரித்து, கூட்டணியில் உள்ள, பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., - பா.ஜ., நிர்வாகிகள், காஞ்சிபுரத்தில், தனித்தனியாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.தே.மு.தி.க., சார்பில், நகர செயலர், சாட்சி சண்முகசுந்தரம் தலைமையில், காஞ்சிபுரத்தில் நேற்று, வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டனர்.


பிரசார குழுவினர், விளக்கடிகோவில் தெருவில் சென்ற போது அவ்வழியே சென்ற பஸ், டாடா மேஜிக் வேன் உள்ளிட்ட வாகனங்களை திடீரென நிறுத்தினர்.பயணியர் மற்றும் டிரைவர்களிடம், இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு, துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதனால், பயணியர் பாதிக்கப்பட்டனர்; வாகன போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)