இந்த தேர்தலோடு தி.மு.க., அழியும்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு

திருக்கழுக்குன்றம் பிரசாரத்தில், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசிய, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் ''அண்ணாதுரை துவக்கிய தி.மு.க., இத்தேர்தலுடன் அழிந்து விடும்,'' என, தெரிவித்தார்.


காஞ்சிபுரம் லோக்சபா, திருப்போரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்கள் மரகதம், ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து, திருக்கழுக்குன்றத்தில், நேற்று முன்தினம் இரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.இதில் பங்கேற்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பேசியதாவது:


லோக்சபா தேர்தலில், பலமான கூட்டணி அமைத்துள்ளோம். அண்ணாதுரையால் துவங்கப்பட்ட தி.மு.க., இந்த தேர்தலுடன், அழிந்தே விடும். அக்கட்சிக்கு, ஸ்டாலின் எம்.டி.; அவர் மகன், மருமகன்கள் டைரக்டர்கள்.கல்பாக்கத்தில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு, கடலோர ரயில்பாதை உள்ளிட்ட கோரிக்கைகளை, கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.


சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழ்நாடு பாடநுால் வாரிய தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வேட்பாளர்கள் சோர்வுமேடையில், ராமதாசின் இருபுறமும், வேட்பாளர்கள் மரகதம், ஆறுமுகம் அமர்ந்திருந்தனர். ராமதாஸ் பேசியபோது, அவர்களை எழுந்து நின்று கைக்கூப்ப, பிரமுகர்கள் அறிவுறுத்தினர். அவர்களும், அவ்வாறே நின்றனர்.சில நிமிடங்களில், அவர்களை அமர கூறியதால், அவர்களும் அமர்ந்தனர். சிறிது நேரத்தில், மீண்டும் நிற்க அறிவுறுத்தினர். இவ்வாறு அடுத்தடுத்து நிற்கவும், அமரவும் அறிவுறுத்தி, அவர்களும் நின்றும், அமர்ந்தும் சோர்ந்தனர்.


போக்குவரத்து பாதிப்பு



திருக்கழுக்குன்றம் பஸ் நிலைய பகுதியில், அரசியல் கட்சியினர், பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். இங்கு, மாலை துவங்கி, இரவு வரை நடக்கும் கூட்டத்தால், பஸ் போக்குவரத்தை, 3 கி.மீ., தொலைவிற்கு மாற்றி, பயணியர் பரிதவிக்கின்றனர். முக்கிய சாலைகளில், போக்குவரத்தும், பல மணி நேரம் முடங்குகிறது.இங்கு பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)