கனிமொழி, கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வழக்கு

மதுரை : லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் கனிமொழி (துாத்துக்குடி), கதிர் ஆனந்த் (வேலுார்) பணம் பட்டுவாடா செய்வதாகவும், அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதுகுளத்துார் கீழச்சிறுபோது அப்துல்லா சேட் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் ஏப்.,18 ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. துாத்துக்குடி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அவரும், தி.மு.க.,வினரும் நுாதன விஞ்ஞான முறையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கின்றனர்.

மார்ச் 27 ல் வேப்பலோடையில் ஆரத்தி எடுத்தவர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தனர். வேலுார் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். சட்டத்திற்கு புறம்பாக நுாதன முறையில் வாக்காளர்களுக்கு 100 கோடி ரூபாய் பட்டுவாடா செய்துள்ளார். அவரது தந்தையும், தி.மு.க., பொருளாளருமான துரைமுருகனின் ஆதரவு மற்றும் இதர பலத்துடன் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். கதிர் ஆனந்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் 36 கோடி ரூபாயை வருமானவரித்துறை பறிமுதல் செய்தது. ஜனநாயகத்தின் வேரான தேர்தலை சீர்குலைத்து பார்லிமென்டிற்குள் புறவழியாக நுழைய கனிமொழி, கதிர் ஆனந்த் முயற்சிக்கின்றனர்.

வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணப்பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இரு வேட்பாளர்களையும் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி தலைமை தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்துள்ளார். தலைமை நீதிபதியின் உத்தரவின்படி, 2019 லோக்சபா மற்றும் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்படும். எனவே, இம்மனுவும் சென்னைக்கு அனுப்பி விசாரணைக்கு பட்டியலிடப்படும்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)