பாலியல் பலாத்கார வழக்கு : அ.ம.மு.க., வேட்பாளர் திணறல்

சென்னை : இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெரியகுளம் சட்டசபை தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர் மீது, போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், தங்க தமிழ்செல்வனின் பெயரும் இடம் பெற்றுள்ளதால், அவர் அலறுகிறார். தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர், கதிர்காமு, 61; டாக்டர். 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், பெரியகுளம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனார். தினகரன் அணிக்கு தாவியதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, பெரியகுளம் தொகுதியில், இடைத்தேர்தல் நடக்கிறது.
அ.ம.மு.க., சார்பில், கதிர்காமு போட்டியிடுகிறார்.கதிர்காமு, 2015ல், தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், கிளினிக் நடத்தி வந்தார். முழங்கால் வலி என, சிகிச்சைக்கு வந்த, இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி, அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதை, மொபைல் போனில் பதிவு செய்து, மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண், ஏப்ரல், 8ல், தேனி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், கதிர்காமு மீது, மூன்று சட்ட பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இது தொடர்பான, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கதிர்காமுவை, நான்கு ஆண்டுகளாக சந்தித்து, 'என் வாழ்க்கையை இப்படி சீரழித்து விட்டீர்களே... எனக்கு வழி சொல்லுங்கள். என் போட்டோ, வீடியோக்களை கொடுத்து விடுங்கள்' என, கெஞ்சினேன். அவர், தேனியில் உள்ள, எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு அழைத்தார். அங்கு, 2017 மே, 7ல் சென்றேன்.
அப்போது, எம்.எல்.ஏ.,வாக இருந்த, தங்க தமிழ்செல்வன் மற்றும் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத மூன்று பேர் இருந்தனர். அவர்கள் சென்ற பின், கதிர்காமுவிடம், 'போட்டோ மற்றும் வீடியோக்களை கொடுங்கள்' என்றேன். அவர், 'தங்க தமிழ்ச்செல்வன் உன் மீது ஆசைப்படுகிறார்; அவரோடு உறவு வைத்துக்கொள். எனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு, உனக்கு தெரியும். இனிமேல் என்னை தொந்தரவு செய்தால், உன்னை குடும்பத்தோடு எரிக்காமல் விடமாட்டேன்' என, கொலை மிரட்டல் விடுத்தார்.
எனவே, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். என்னை கற்பழித்து, ஆபாச படம் எடுத்து, அதை வெளியிடுவேன் என, கொலை மிரட்டல் விடுத்த, கதிர்காமு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அப்பெண் புகார் அளித்ததாக, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தங்க தமிழ்செல்வன், தினகரனின் வலதுகரமாக செயல்படுபவர். அவர் தற்போது, தேனி லோக்சபா தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார்.
பாலியல் பலாத்கார விவகாரத்தில், தங்க தமிழ்செல்வன் பெயரும் உள்ளது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில், இந்த வழக்கை எப்படி சமாளிப்பது என தெரியாமல், தங்க தமிழ்செல்வன் திணறி வருகிறார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)