முஸ்லிம்கள் ஓட்டு: மேனகா சர்ச்சை பேச்சு

சுல்தான்பூர்: '' முஸ்லிம்கள் எனக்கு ஓட்டு போட வேண்டும். இல்லாவிட்டால், உங்களுக்கு உதவ மாட்டேன்'' என மத்திய அமைச்சர் மேனகா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யின் சுல்தான்பூரில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் மேனகா போட்டியிடுகிறார். அங்கு அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், மேனகா பேசியதாக 3 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் மேனகா பேசியுள்ளதாவது: தேர்தலின் நான் வெற்றி பெற்றுள்ளேன். மக்களின் அன்பு மற்றும் ஆதரவு காரணமாக வெற்றி பெற்றுளளேன். முஸ்லிம்கள் இல்லாமல் வெற்றி பெறுவதை நான் விரும்பவில்லை. அவர்கள் ஆதரவு இல்லாமல் நான் வென்றால், அவர்களுக்கு எப்படி உதவ முடியும்.
நாம் மகாத்மா காந்தியின் குழந்தைகள் இல்லையா? தேர்தலில் வெற்றியை தக்க வைப்போமா இல்லையா என்பது முக்கியம் அல்ல. உங்கள் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் வெற்றி கிடைக்கும். எனக்கு ஓட்டு போடாவிட்டால், உங்களுக்கு உதவ மாட்டேன். நான் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளேன். உங்களுக்கு நான் தேவை. இதற்கான அடித்தளத்தை அமைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)