ரூ.210 கோடிக்கு தேர்தல் பத்திரம் பெற்ற பா.ஜ.,

புதுடில்லி : 2017-18 ம் நிதியாண்டில் பா.ஜ., ரூ.210 கோடி அளவிற்கு தேர்தல் பத்திரம் பெற்றுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


பா.ஜ., 2016-17 ம் நிதியாண்டில் ரூ.997 கோடி மற்றும் 2017-18 ம் நிதியாண்டில் ரூ.990 கோடி நிதியாக பெற்றுள்ளது. இது இதே கால அளவில் காங்., பெற்ற தேர்தல் நிதியை விட 5 மடங்கு அதிகம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் ஆஜரான தேர்தல் கமிஷனின் மூத்த வழக்கறிஞர் ரகேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார். கட்சிகளின் தேர்தல் பத்திரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தொடர்ந்த வழக்கில் ஆஜரான திரிவேதி இந்த தகவலை தெரிவித்தார்.


2017-18 ம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட பா.ஜ., தான் அதிக நிதி பெற்றுள்ளதாக பிரஷாந்த் பூஷன் கூறி இருந்ததை, திரிவேதி தாக்கல் செய்த இரண்டு பக்க அறிக்கை உறுதி செய்துள்ளது. எஸ்பிஐ மூலம் பா.ஜ., ரூ.222 கோடி மதிப்பிலான 520 பத்திரங்களை பெற்றுள்ளது. இதில் 511 பத்திரங்களின் மதிப்பு ரூ.221 கோடியாகும்.

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில் கூறுகையில், ரூ.210 கோடிக்கு பத்திரங்கள் பெற்றதற்கான ரசீதுகள் பா.ஜ.,விடம் உள்ளன. இதற்கு முன் ரொக்கமாக அரசியல் கட்சிகள் பெற்ற அதிகபட்ச நிதி ரூ.20,000 ஆகும். வரி செலுத்தப்பட்ட பணம் தான் அரசியல் நிதியாக கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.


2016-17 ல் பா.ஜ., பெற்ற மொத்த நிதி ரூ.997 கோடி. இதில் ரூ.468 கோடி ரொக்கமாக பெற்றப்பட்டதாகவும், இவை அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து ரூ.20,000 க்கும் கீழ் என்ற அளவிலேயே வசூலிக்கப்பட்டது எனவும் தேர்தல் கமிஷனிடம் பா.ஜ., கூறி உள்ளது. இதே கால அளவில் காங்., ரூ.180 கோடி நிதி பெற்றுள்ளது. இதில் ரூ.138 கோடி அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து சிறு சிறு தொகையாக பெறப்பட்டுள்ளது. 2017-18 ல் பா.ஜ., ரூ.990 கோடி நிதி பெற்றுள்ளது. இதில் ரூ.342 கோடி சிறு சிறு தொகைகளாக பெறப்பட்டுள்ளது. ரூ.210 தேர்தல் பத்திரங்களாக பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் காங்., ரூ.168 கோடி நிதி பெற்றுள்ளது. இதில் ரூ.141.50 கோடி சிறுசிறு தொகைகளாகவும், ரூ.5 கோடி நிதி தேர்தல் பத்திரங்களாகவும் பெறப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)