தம்பியை நீங்க தான் கரையேத்தணும்!

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மைத்துனர், சுதீஷ்; அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளராக, கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, தி.மு.க., தரப்பில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன், கவுதம சிகாமணி நிறுத்தப்பட்டுள்ளார்.இந்நிலையில், தன் தம்பிக்கு ஆதரவாக, பிரசாரம் செய்வதற்கு, நேற்று முன்தினம் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, கள்ளக்குறிச்சி சென்றார். அப்போது, கோவையில் பிரசாரம் செய்து விட்டு, தன் சேலம் இல்லத்திற்கு, முதல்வர் திரும்பியிருந்தார்.
பிரேமலதா, சுதீஷ், அவரது மனைவி பூர்ணஜோதி ஆகியோர், முதல்வரை சந்தித்தனர்.முதல்வர் வீட்டில், அரை மணி நேரம் பிரேமலதா, சுதீஷ் ஆலோசனை நடத்தினர். அப்போது, பிரேமலதா, 'எனக்கு அக்கா, தம்பி உள்ளனர். அண்ணன் இல்லை. அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அண்ணனாக நீங்கள் கிடைத்து இருக்கிறீர்கள்' என, முதல்வரிடம் கூறியுள்ளார். மூவரும், முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளனர். 'தம்பியை கரையேற்ற வேண்டிய கடமை, அண்ணனுக்கு உள்ளது. உங்களை நம்பித் தான், சேலம் மாவட்டத்தில், பல பகுதிகளை அடக்கிய, கள்ளக்குறிச்சி தொகுதியை, சுதீஷ் தேர்வு செய்துள்ளார்.
'ஏற்கனவே, மூன்று முறை சுதீஷ் தோல்வி அடைந்துள்ளார். இம்முறை, வெற்றி கணக்கை, உங்கள் வாயிலாக, சுதீஷ் துவங்க வேண்டும்' என, பிரேமலதா கூறியுள்ளார்.'விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சண்முகம், கள்ளக்குறிச்சி பக்கமே தலை காட்டு வதில்லை' என்றும், பிரேமலதா புகார் கூறியுள்ளார். இதுகுறித்து, அமைச்சரிடம் பேசுவதாக, முதல்வர் உறுதிஅளித்து உள்ளார்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)