பொதுமக்கள் எதிர்ப்பு திரும்பி சென்ற திருமாவளவன்

பெரம்பலுார் : சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும், வி.சி., தலைவர் திருமாவளவனை, ஊருக்குள் அனுமதிக்காமல் கிராம மக்கள் மற்றும் பா.ம.க.,வினர் திருப்பி அனுப்பினர்.சிதம்பரம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், வி.சி., தலைவர் திருமாவளவன், பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.இவர், நேற்று முன்தினம், சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, பெரம்பலுார், குன்னம் சட்டசபை தொகுதிகளில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில், பிரசாரத்தில் ஈடுபட்டார்.இரவு, 9:00 மணியளவில், ஒகளூர் கிராமத்துக்கு, திருமாவளவன் திறந்த ஜீப்பில் சென்றார்.
அப்போது, அவரது வாகனத்தை, பொதுமக்கள் மற்றும் பா.ம.க.,வினர் என, 100க்கும் மேற்பட்டோர் மறித்தனர்.'எங்கள் ஊரில் உள்ள மயான கொட்டகையை, நாங்கள் புதிதாக கட்டும்போது, உங்கள் கட்சியை சேர்ந்த திராவிடமணி என்பவர், எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால், நீங்கள் எங்கள் தெருவுக்குள் ஓட்டு சேகரிக்க வரக்கூடாது' எனக் கூறினர்.'இது பற்றி எனக்கு தெரியாது' என, திருமாவளவன் தெரிவித்தார். இருப்பினும், அவர்கள் சமாதானம் ஆகவில்லை.
இதனால், திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.மங்கலமேடு போலீசார் பேச்சு நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின், போலீஸ் பாதுகாப்புடன், திருமாவளவன், ஓட்டு கேட்காமல், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)