பத்திரம் எழுதி கொடுத்து ஓட்டு கேட்கும் சுயேச்சை

வேலுார் : மக்களிடம், 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்டு, சுயேச்சை வேட்பாளர், ஓட்டு சேகரித்து வருகிறார்.வேலுார் லோக்சபா தொகுதியில், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில், நரேஷ்குமார் என்பவர் போட்டியிடுகிறார். சமூக ஆர்வலரான இவர், தேசிய நதி நீர் இணைப்பை வலியுறுத்தி, கடந்தாண்டு, இமயம் முதல், குமரி வரை, சைக்கிளில் சென்று வந்தார்.அதேபோல, மனித நேயம் காக்க, சீனா எல்லையில் இருந்து, பாகிஸ்தான் எல்லை வரை, சைக்கிளில் சென்று வந்தார். மழை நீர் சேமிப்பை வலியுறுத்தி, வேலுாரில், 100 இளைஞர்களுடன், 100 கி.மீ., சைக்கிளில் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
தற்போது, ஒவ்வொரு வாக்காளரின் வீட்டுக்கும் சென்று, ஓட்டு சேகரிக்கிறார். அப்போது, தன்னை வெற்றி பெறச் செய்தால், வாக்காளர்கள் தெரிவிக்கும் குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக, 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி, கையெழுத்திட்டு கொடுத்து வருகிறார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)