பணத்தை பதுக்கும் அ.தி.மு.க.வினர்: பதறும் பா.ஜ. நிர்வாகிகள்

ராமநாதபுரம் தொகுதி, பா.ஜ., வேட்பாளர், தேர்தல் செலவிற்காக கொடுக்கும் பணத்தை, அறந்தாங்கி தொகுதியில் உள்ள, அ.தி.மு.க.,வினர் பதுக்கி விடுவதால், பா.ஜ.,வினர் திணறி வருகின்றனர்.

ராமநாதபுரம், பா.ஜ., வேட்பாளராக, திருநெல்வேலியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர், நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். வெற்றிக்காக இவர், பணத்தை தண்ணீராய் செலவழித்து வருகிறார். தேர்தல் பணிக்கு, அ.தி.மு.க.,வினரையே அதிகம் சார்ந்துள்ளதால், பண பட்டுவாடாவையும், அ.தி.மு.க.,வினரே செய்து வருகின்றனர்.ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு, வேட்பாளர், நயினார் நாகேந்திரன் சார்பில், பல லட்சம் ரூபாய், அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சில ஆயிரம் கூட செலவிடவில்லை. இந்த தொகுதிக்கான பணத்தை, அறந்தாங்கியைச் சேர்ந்த, அ.தி.மு.க.,வினரிடம் மட்டுமே வழங்குவதால், அந்த பணம் குறித்து, பா.ஜ.,வினருக்கு தெரிவதில்லை.

மேலும், பா.ஜ., கூட்டணி கட்சியினருக்கு அன்றாட தேர்தல்செலவிற்கு கூட, அ.தி.மு.க.,வினர் பணம் கொடுக்காததால், அக்கட்சியினர் உற்சாகம் இழந்துள்ளனர்.நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க.,வில் இருந்து விலகிச் சென்றவர் என்பதால், இவரை ஆதரித்து, அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட செயலர் வைரமுத்து உள்ளிட்டோர், இன்னும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. கூட்டணி கட்சியினரை கவனிக்காமல், அ.தி.மு.க.,வினர் பணத்தை, 'அமுக்கி' விடுவதால், நயினார் நாகேந்திரனுக்காக வேலை செய்ய, பா.ஜ.,வினர் திணறுகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)