துாத்துக்குடி : தி.மு.க.,வேட்பாளராக துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவை தி.மு.க., வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ''இங்கு போட்டியிடும் கனிமொழி, பார்லிமென்ட் விவாதத்தில் 'பெண் புலி' என்று அழைக்கப்படுபவர். இவரை விட துாத்துக்குடிக்கு சிறந்த வேட்பாளர் வேறு ஒருவர் இருக்க முடியாது. எனது தங்கைக்கு வாக்களியுங்கள்.
அவர் ஒரு சமூகப் போராளியாக வளர்ந்திருக்கிறார். பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியவர். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட ஒரு மாதம் அல்ல, ஒரு மணி நேரம் அல்ல, ஒரே நிமிடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது,'' என்றார்.
வாசகர் கருத்து