தேர்தல் பிரசாரத்துக்கு, 'ஜாமின்' கேட்கும் லாலு?

புதுடில்லி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு, லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காகவே, 'ஜாமின்' கேட்பதாக, சி.பி.ஐ., தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை தீவனம்:பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் -- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத், 71, பீஹார் முதல்வராக இருந்த போது, கால்நடை தீவனம் வாங்கியதில், கருவூலங்களில் பணம் எடுத்து, 950 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக, லாலுவுக்கு எதிராக, ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், நான்கு வழக்குகளில், லாலுவுக்கு, 27 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சிறையில், லாலு அடைக்கப்பட்டான். உடல் நிலை பாதிப்பால், ராஞ்சி மருத்துவமனையில், லாலுவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல்நிலையை காரணம் காட்டி, தனக்கு, 'ஜாமின்' வழங்கக் கோரி, லாலு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுகுறித்து பதில் அளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சி.பி.ஐ., தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: லோக்சபா தேர்தலில், தன் கட்சியை வழிநடத்தவும், பிரசாரம் செய்வதற்காகவும் தான், லாலு தரப்பில், 'ஜாமின்' மனு தாக்கல் செய்யப்படுகிறது. லாலுவை பார்க்க வந்தவர்களின் விபரத்தை பார்த்தாலே, இது புரியும்.

உறுதி:உடல் நிலையை காரணம் காட்டி, லாலு, தொடர்ந்து, மருத்துவமனையிலேயே இருந்து வருகிறான். 'ஜாமின்' வழங்கப்பட்டால், லாலு, தேர்தல் பணிகளில் ஈடுபடுவது உறுதி. இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)