அன்புமணியின் நக்கல் பேச்சு

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணியின், நக்கல் பேச்சு காரணமாக, தி.மு.க.,வின், அதிகார மையங்கள் கடுப்படைந்து உள்ளன.தர்மபுரி தொகுதியில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, தி.மு.க., வேட்பாளராக, செந்தில்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். அன்புமணியை வீழ்த்த, தி.மு.க., தரப்பில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.கேள்விக்குறிதர்மபுரியில், அன்புமணிக்கு கிடைக்கும், வன்னிய சமுதாய ஓட்டுகளை பிரிப்பதற்கும், தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், அன்புமணியின் வெற்றி, தொகுதியில் கேள்விக்குறியாகி உள்ளது.
இது மட்டுமின்றி, பிரசாரத்தில் அன்புமணியை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார்.ஸ்டாலின் மகன் உதயநிதி மட்டுமின்றி, வன்னிய சமுதாய தலைவர்களும், அன்புமணிக்கு எதிரான பிரசாரத்தில் தீவிரம் காட்டுகின்றனர்.இதனால், தி.மு.க., தலைமை மீது, அன்புமணி கடும் கோபத்தில் உள்ளார்.இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய அன்புமணி, 'நான்கு சின்ன பசங்களை நம்பி, தி.மு.க., தலைமை, கட்சி நடத்துகிறது' என்று நக்கலடித்துள்ளார்.
இந்த பேச்சால், தி.மு.க.,வின் அதிகார மையங்கள் கடுப்படைந்துள்ளன.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.தி.மு.க.,வில், ஸ்டாலினுக்கு அடுத்து, அவரது மருமகன் சபரீசன், மகன் உதயநிதி, அதிகார மையங்களாக உள்ளனர்.ரகசிய பேச்சுசபரீசனுக்கு, அவரது தொழில் பங்குதாரர் கார்த்தி, உதவிகரமாக உள்ளார். இவர், சென்னை, அண்ணாநகர் தொகுதி, எம்.எல்.ஏ., மோகனின் மகன்.அதேபோல, உதயநிதிக்கு, அவரது நண்பரும், திருவெறும்பூர், எம்.எல்.ஏ.,வுமான மகேஷ் உதவியாக உள்ளார். இவர், ஸ்டாலினின் நெருங்கிய நண்பரின் மகன்.இவர்கள், நான்கு பேரும் தான், லோக்சபா தேர்தல் கூட்டணி ஏற்பாடுகளை கவனித்தனர். வேட்பாளர் தேர்விலும் கவனம் செலுத்தினர்.
பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்க, காங்கிரசை சேர்ந்த விஷ்ணுபிரசாத் வாயிலாக, அன்புமணியிடம், இவர்கள் தான் ரகசிய பேச்சு நடத்தியுள்ளனர்.ஆனால், ராமதாஸ், வேறு வழியில் சென்று, அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை உறுதி செய்தார். இதனால், தி.மு.க.,வின் அதிகார மையங்களாக உள்ள, நான்கு பேரும், அன்புமணி மீது கடுப்பில் உள்ளனர்.இப்போது, நான்கு பேரை மறைமுகமாக விமர்சனம் செய்து, அவர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளார், அன்புமணி. இதனால், அவரை தோற்கடித்தே தீருவது என்று, நான்கு பேரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)