பிரசாரத்தில் தமிழிசையை கட்டிப்பிடித்து வரவேற்ற பெண்கள்

துாத்துக்குடி : துாத்துக்குடி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் பா.ஜ., வேட்பாளர் தமிழிசை, ''என்னை பார்த்தால் உங்கள் வீட்டு பெண்ணாக தெரியவில்லையா,'' என பிரசாரத்தில் கேள்வி எழுப்ப அவரை பெண்கள் கட்டி பிடித்து வரவேற்றனர். துாத்துக்குடியில் முகாமிட்டுள்ள தமிழிசை காலை 6:30 மணிக்கு பிரசாரத்தை துவக்கி விடுகிறார். நேற்று முன் தினம் காலை ஆத்துாரில் பிரசாரத்தை துவக்கினார். மாஜி அமைச்சர் சண்முகநாதன் உட்பட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். புன்னக்காயல் மீன்பிடி தளத்திற்கு சென்று ஒவ்வொரு மீனவர்களிடம் ஆதரவு திரட்டினார்.
மீனவர் ஆரோக்கியம் பிடித்து வந்த மீன்களை கைகளில் துாக்கி விலை எவ்வளவு என கேள்வி எழுப்பினார். அவர் 1000 ரூபாய் என்றதும், 'முதல் வியாபாரமா' என கேள்வி எழுப்பியவாறு பணத்தை கொடுத்து மீன்களை வாங்கி கொண்டார். மீன் விற்பனை சங்க நிர்வாகிகளிடம், ''எதிரணியில் போட்டியிடும் வேட்பாளர் போல நான் வெளியூர் வேட்பாளர் இல்லை. இந்த மண்ணின் மைந்தள்,'' என்றார்.
மேலும் அங்கிருந்த மீனவ பெண்கள் அவரை கட்டி தழுவி வரவேற்க, ''உங்களிடம் பா.ஜ., வந்தால் கிறிஸ்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என சிலர் தவறாக பிரசாரம் செய்திருக்கலாம். கடந்த நான்கரை ஆண்டுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டதா. எந்த குறை என்றாலும் என்னிடம் தெரிவிக்கலாம்,'' என்றார். வடக்கு ஆத்துாரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவரை அங்கிருந்த மூதாட்டிகள் கட்டி தழுவி வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய தமிழிசை, ''என்னை பார்த்தால் எப்படி தெரிகிறது. உங்கள் வீட்டு பெண்ணாக தெரியவில்லையா. மேலும் தி.மு.க., வேட்பாளர் கனிமொழி ஓராண்டு எங்கே இருந்து விட்டு வந்தார் என உங்களுக்கு தெரியும். அப்படிபட்டவரா உங்களுக்கு தேவை.
என்னை சகோதரியாக, மகளாக, பேத்தியாக கருதி வெற்றி பெற செய்யுங்கள். நான் டாக்டர் என உங்களுக்கு தெரியுமா. என்னை வெற்றி பெற வைத்தால் எம்.பி.,யாக செயல்படுவதுடன் டாக்டராகவும் உங்களுடன் இருந்து இலவசமாக மருத்துவ சேவையும் செய்வேன்,'' என்றார். ஆறுமுகநேரியில் கூட்டணி கூட்சியினரை சந்தித்து ஆலோசித்தார். காரில் புறப்பட்ட அவரை பஸ் ஸ்டாப்பில் நின்ற முஸ்லீம் பெண் ஒருவர் வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்தார். உடனே காரை விட்டு இறங்கிய தமிழிசை அவரை கட்டி தழுவ, நீங்கள் பேசுவது நன்றாக இருக்கிறது என அந்த பெண் பாராட்டினார். பின் துாத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் தமிழிசை பிரசாரத்தில் ஈடுபட்டார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)