யாருக்கும் ஆதரவில்லை: ரஜினி மீண்டும் கைவிரிப்பு

சென்னை: எனது அரசியல் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறிவிட்டேன். அதில் மாற்றம் இல்லை என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.


சென்னையில் நிருபர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது: எனது அரசியல் நிலைப்பாடு பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். அதில் மாற்றம் கிடையாது. பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை நேற்று வெளிவந்துள்ளது. அதில் நதிகள் இணைப்பிற்கு ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. நதிகள் இணைப்பு குறித்து நான் ஏற்கனவே பேசியுள்ளேன். இது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டம். அவர் பிரதமராக இருந்த போது அவரிடம் இது குறித்து பேசியுள்ளேன். நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பகீரத யோஜனா என பெயர் வைக்கலாம் என அவரிடம் கூறினேன்.



மக்கள் என்ன முடிவு எடுக்க போகின்றனர் என்பது தெரியவில்லை. மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தால், முதலில் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிகள் இணைக்கப்பட்டால், பாதி பிரச்னை தீர்ந்துவிடும். வறுமை ஒழியும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும். இது தேர்தல் நேரம். முக்கியமான நேரம். இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

லோக்சபா தேர்தலில் கமலுக்கு ஆதரவா என்ற கேள்விக்கு, எனது நிலைப்பாட்டை ஏற்கனவே கூறியுள்ளேன்.அதனை பெரிதுபடுத்தி, அவருடனான நட்பை கெடுத்துவிட வேண்டாம் எனவும் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)