தேர்தலுக்கு பின் 3வது அணி வந்தே தீரும்: கமல்

கோவை : ''தேர்தலுக்குப்பின் மூன்றாவது அணி வந்தே தீரும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல்ஹாசன் கூறினார்.மக்கள் நீதி மையம் கட்சியின், கோவை லோக்சபா தொகுதி தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட, பொதுச்செயலர் அருணாச்சலம் பெற்றுக்கொண்டார்.இதன் பின், கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், கேள்வி கேட்காத ஒரே காரணத்தால், ஆட்சியாளர்களுக்கு ஆணவம் வந்துவிட்டது. மக்கள் தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.
இத்தேர்தலில் நாங்கள் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறோம். ஒரு புரட்சியின் விளிம்பில், நின்றுக் கொண்டிருக்கிறது தமிழகம். எனவே, மூன்றாவது அணி வந்தே தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. பெரும் தலைவர்கள் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)