கள நிலவரத்தால் காங்., கலவரம்

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அசாமின், திப்ருகர் தொகுதி, காங்கிரசின் நம்பிக்கைக்குரிய தொகுதியாக இருந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறி உள்ளது. இழந்த பெருமையை, காங்கிரஸ் பெறுமா என்பது, தேர்தல் முடிவில் தான் தெரியும்.


அதற்கான காரணங்களை பார்ப்போம்.

அசாமில் உள்ள, 14 தொகுதிகளுக்கு, 11, 18, 23ம் தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.பாரம்பரிய தேயிலை தொழிலுடன், மிகப் பெரிய தொழில் மண்டலமாக, திப்ருகர் தொகுதி விளங்குகிறது.இந்தத் தொகுதியில், காங்கிரஸ், 12 முறை; பா.ஜ., மற்றும் அசோம் கண பரிஷத் கட்சிகள், தலா, ஒரு முறை வென்றுள்ளன.தற்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், சர்பானந்த சோனவால், 2004ல், இந்தத் தொகுதியில், அசோம் கண பரிஷத் சார்பில் வென்றவர்; 2009ல் காங்கிரசின், பாபன் சிங் கடோவர் வென்றார்.ஆனால், கடந்த தேர்தலில், பா.ஜ.,வின் ரமேஷ்வர் தெலியிடம் தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலிலும், இவர்கள் இருவரும் போட்டியிடுகின்றனர்.

இங்கு, 200க்கும் மேற்பட்ட தேயிலை தோட்டங்கள் உள்ளன. தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள, கடோவர் மற்றும் தெலி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களின் ஓட்டு, இந்த முறைய பிரிய வாய்ப்பு உள்ளது. அதே நேரம், மற்ற பழங்குடியினரின் ஓட்டு, பா.ஜ.,வுக்கே கிடைக்கும். அசோம் கண பரிஷத்துடன் கூட்டணி அமைத்துள்ளதால், இவர்களின் ஓட்டு, பா.ஜ.,வுக்கே கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு, வட கிழக்கு மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், இந்த மாநிலத்தைச் சேர்ந்த, ஆறு, அசாம் பழங்குடியின பிரிவுகளை, பட்டியல் இனத்தில் சேர்ப்பதாக, பா.ஜ., கூறியுள்ளது. அதனால், இந்த மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இரு கட்சிகளும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாலும், பா.ஜ.,வுக்கே சாதகமான நிலை நிலவுகிறது. 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், இந்த தொகுதிக்கு உட்பட்ட, 10 சட்டசபை தொகுதிகளிலும், பா.ஜ., வென்றுள்ளது.

கடந்தாண்டு, டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும், பா.ஜ.,வுக்கே, மக்களின் ஆதரவு இருந்தது.அதனால், இந்தத் தொகுதியில், ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த காங்கிரஸ், இழந்த பெருமையை மீட்டெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கள நிலவரம், காங்கிரசுக்கு கலவரத்தை ஏற்படுத்திஉள்ளதே!

- சமுத்ர குப்த கஷ்யப் -

சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)