தம்பியால் நெருக்கடி

லாலுவுக்கு, பிள்ளைகளால் நெருக்கடி என்றால், மத்திய அமைச்சர், ராம்விலாஸ் பாஸ்வானுக்கு, சகோதரர், ராமசந்திர பாஸ்வானால் பிரச்னை. இவர், கடந்த தேர்தலில், பீஹாரின் சமஸ்திபுரில், 6,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தியவர்.

இதற்காக, 50 கோடி ரூபாய் செலவழித்ததாக, தனியார், 'டிவி'யின், ரகசிய ஆப்பரேஷனில் உளறி கொட்டியவர். நாடு முழுவதும் இந்த காட்சி ஒளிபரப்பானதால், ராம்விலாஸ் பாஸ்வான், 'அப்செட்' ஆகியுள்ளார்.'புதியவர்களை சேர்க்காதே; எதுவும் பேசாதே என, பலமுறை கூறினாலும், ராமசந்திரன் கேட்க மறுக்கிறாரே...' என, கட்சி யினரிடம் புலம்புகிறார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)