காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க! முஸ்லிம்களுக்கு மாயாவதி கோரிக்கை

தியோபந்த்: ''காங்கிரசுக்கு ஓட்டு போட்டு, பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகளை பிரிக்க உதவக் கூடாது,'' என, முஸ்லிம்களை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேட்டுக் கொண்டார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள், கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில், மேலும் சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், தியோபந்த் என்ற இடத்தில், கூட்டணி சார்பில், பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக்தள் தலைவர் அஜித் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், மாயாவதி பேசியதாவது: பா.ஜ.,வின் பிரதான எதிரி, காங்கிரஸ் இல்லை; நாங்கள் தான் எதிரி. எங்கள் கூட்டணி வெற்றி பெறக் கூடாது என, பா.ஜ.,வை விட, காங்., தான் அதிகம் ஆசைப்படுகிறது. உ.பி.,யில், பா.ஜ., வெற்றி பெற, காங்., உதவுகிறது. அதனால், காங்கிரசுக்கு ஓட்டளித்து, பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகளை பிரிக்க உதவ வேண்டாம் என, முஸ்லிம்களை நேரிடையாகவே கேட்டுக் கொள்கிறேன்.

லோக்சபா தேர்தலில், பா.ஜ., நிச்சயம் தோல்வியடையும்; அவர்களது வெறுப்பு அரசியல், காவலாளி பிரசாரம் ஆகியவை, மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், நாட்டை பல ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ், மக்கள் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. காங்கிரசின், 'நியாய்' திட்டம், ஒரு ஏமாற்று வேலை; இந்த திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. பணம் கொடுப்பதை விட, வேலை கொடுப்பது தான் முக்கியம். ராகுலின் பாட்டி இந்திரா அமல்படுத்திய, 20 அம்ச திட்டத்தால், எந்த பயனும் ஏற்படவில்லை. 'நியாய்' திட்டமும், அதுபோலத் தான் இருக்கும்.

நாங்கள் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. ஆனால், மக்களுக்கு தேவையானதை செய்வோம். பல ஆண்டுகள் அராஜக ஆட்சி நடத்தியதால் தான், இன்று பல மாநிலங்களில், காங்., காணாமல் போய்விட்டது; இப்போது, பா.ஜ.,வும், அதேபோல் செயல்படுகிறது. காங்.,குக்கு, 'போபர்ஸ்' ஊழல் என்றால், பா.ஜ.,வுக்கு, 'ரபேல்' ஊழல். சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை, தன் கைப்பாவையாக, பா.ஜ., பயன்படுத்துகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
நாட்டில் உள்ள அனைத்து காவலாளிகளும் விரட்டியடிக்கப்படுவர். லோக்சபா தேர்தலுக்குப் பின், புதிய பிரதமர் பதவியேற்பார். தற்பேது, வசந்த நவராத்திரி காலம் நடக்கிறது. இப்போது, யாரும் பொய் பேசக் கூடாது. கடந்த தேர்தலில், மோடி கூறிய பொய்களை, மக்கள் நம்பியதால் தான், ஐந்து ஆண்டுகளாக, பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. -அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதிவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)