வயநாட்டில் ராகுல் பாலபாரதி கிண்டல்

வயநாட்டில், கம்யூ., வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும், காங்கிரஸ் தலைவர்ராகுலை, கிண்டல் செய்யும் வகையில், மார்க்சிஸ்ட் முன்னாள், எம்.எல்.ஏ., பாலபாரதி, 'பேஸ்புக்' கில் கருத்து தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல், அமேதி தவிர, கேரளா மாநிலம்,வயநாட்டிலும் போட்டியிடுகிறார். சமீபத்தில்,இங்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.திண்டுக்கல் சட்டசபை தொகுதி, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள், எம்.எல்.ஏ., பாலபாரதி, தன் பேஸ்புக் பக்கத்தில், 'நேருவுக்கு பேரன், பேருக்கு சூரன்...'


காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி பகுதியில், பெண்களுக்காக சொல்லப்பட்டுள்ள அனைத்து விஷயங்களும் அருமை.'இது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தானா என்ற சந்தேகம் வந்துள்ளது' என, கிண்டலாக பதிவிட்டுள்ளார்.இதைப் பார்த்த, தமிழக காங்கிரஸ் கட்சியினர், 'கூட்டணியில் இருந்தபடி, இப்படி விமர்சித்தால், இவர்கள் போட்டியிடும் கோவை, மதுரையில் எப்படி, காங்கிரஸ் கட்சியினர் முழு மனதுடன் தேர்தல் பணியாற்றுவர்?' என, கேள்வி எழுப்பியுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)