சரிதா நாயர் வேட்பு மனு கேரளாவில் நிராகரிப்பு

வயநாடு:வயநாடு மற்றும் எர்ணா குளம் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த, 'சோலார்' ஊழல் வழக்கில் சிக்கி யுள்ள, நடிகை சரிதா நாயரின் வேட்பு மனுக்கள், நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.


கேரள மாநிலத்தில் முந்தைய, காங்., ஆட்சியில், 'சோலார் பேனல்' எனப்படும், சூரிய ஒளி மின் தகடு அமைப்பதற்கான உரிமம் பெற்றுத் தருவதாக கூறி, பண மோசடி செய்ததாக, சரிதா நாயர் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர், சில மலையாள திரைப்படங்களிலும், 'டிவி' சீரியல்களிலும் நடித்துள்ளார்.


கைது செய்யப்பட்ட பின், ஜாமினில் வந்த, சரிதா நாயர், அப்போதைய கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, உம்மன் சாண்டி உட்பட பல அமைச்சர்கள் மீதும், பாலியல் புகார் கூறினார்.இந்நிலையில், தற்போதைய லோக்சபா தேர்தலில், கேரளாவின் எர்ணா குளம் தொகுதியில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்தார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல், வயநாட்டில் போட்டியிடுவதை அறிந்து, அங்கும் வேட்புமனு தாக்கல் செய்தார்.'என்னை பாலியல் கொடுமைப் படுத்திய காங்கிரஸ் பிரமுகர்கள் பற்றி பல புகார் அளித்தும், ராகுல் நடவடிக்கை எடுக்காததால், அவரை எதிர்த்து போட்டியிடுகிறேன்' என, சரிதா நாயர் கூறினார்.


நேற்று வேட்பு மனு பரிசீலனை நடந்தது. 'சோலார்' மோசடியில் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்ததால், சரிதா நாயரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுவதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக, வக்கீல் தெரிவித்தார். ஆனாலும், அதற்கான ஆவணங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் தாக்கல் செய்யப் படாததால், இரண்டு தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)