'பார்லி.,யில் 545 வேலை காலி': கிண்டல் விளம்பரத்தால் சலசலப்பு

லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ள நிலையில், 'இந்திய பார்லிமென்டில், 545 வேலைகள் காலியாக உள்ளன' என்ற கிண்டல் விளம்பரம், சமூக ஊடகங்களில் பரவுகிறது.அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பார்லிமென்டில் காலியாக உள்ள வேலைக்கு வயது நிர்ணயிக்கப்படவில்லை. அனுபவம், கல்வி தேவையில்லை. சம்பளம் மாதம், 1.9 லட்சம் ரூபாய். அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற, அவசியம் இல்லை. தங்குமிடம் இலவசம்; மானிய விலையில் உணவு. இலவசமாக, மூன்று தொலைபேசி; 25 ஆயிரம் யூனிட் மின்சாரம். குடும்பத்தோடு, 34 முறை வெளிநாட்டு பயணம். பெட்ரோல், ரயிலில், 'ஏசி' முதல் வகுப்பில் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யும் சதி.ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தால், 20 ஆயிரம் குறைந்தபட்ச ஒய்வூதியம். ஆண்டுதோறும், 1,500 கூடுதல் ஓய்வூதிய வசதி, இன்னும் நிறைய வசதிகளோடு வேலை காலியாக இருக்கிறது.
இவ்வாறு விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஏற்கனவே, பல லட்சம் இளைஞர்கள், லைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் சூழலில், கிண்டலாக இந்த விளம்பரத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)